சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது எனவும், இந்த விவாகரம் குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும் என்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிர் பயன்பெரும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், உரிமை தொகை வழங்கும் நிகழ்வை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்வதாக எழுந்த புகார் குறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "இந்த திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.
இது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். இது குறித்து நாடே பாராட்டுகிறது. தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன், மற்றும் உரிய தொகையை வங்கி கணக்கில் இருப்பு வைக்கவில்லை ஆகிய காரணங்களுக்காக சில வங்கிகள் பிடித்தம் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிட்டிங்களா?... அமைச்சர் கொடுத்த அப்டேட்!