தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் பெற்ற தொழிலதிபருக்கு சிறை! - போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் பெற்ற தொழிலதிபர்

சென்னை: போலி ஆவணங்களை கொடுத்து 15 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில் தொழிலதிபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

By

Published : Nov 30, 2019, 8:32 AM IST

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜி.வி.கிருஷ்ணன் போலி ஆவணங்களை கொடுத்து இந்தியன் வங்கி சென்னை ராயபுரம் கிளையில் கடந்த 2002ஆம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர், ஜி.வி.கிருஷ்ணன் சாட்சி கையெழுத்திட்ட இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரின் மீது சி.பி.ஐ. அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜி.வி.கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளதால், வங்கி மேலாளர், சாட்சி கையெழுத்திட்ட இரண்டு பேர்கள் மீதான வழக்கு தனியாக நடந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு வங்கி மேலாளர் உள்பட மூன்று பேருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜி.வி.கிருஷ்ணன் வழக்கு விசாரணைக்காக ஆஜரானார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், குற்றம்சாட்டப்பட்ட ஜி.வி.கிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

மேலும், வங்கிக்கு இழப்பீடாக 20 லட்சம் ரூபாயை, மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாதபட்சத்தில் வங்கி நிர்வாகம் ஜி.வி.கிருஷ்ணன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ''நான் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிபெறுவேன்''- லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details