தமிழ்நாடு

tamil nadu

கடன் மோசடி வழக்கில் யூனியன் வங்கி மேலாளருக்கு 12 ஆண்டுகள் சிறை!

கடன் மோசடி வழக்கில் யூனியன் வங்கி மேலாளருக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By

Published : Sep 29, 2020, 5:34 PM IST

Published : Sep 29, 2020, 5:34 PM IST

Bank cheating, office got 12 years imprisonments, cbi court order
Bank cheating, office got 12 years imprisonments, cbi court order

சென்னை:கடன் மோசடி வழக்கில் யூனியன் வங்கி மேலாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில், கடந்த 2006-2007ஆம் ஆண்டில், நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதன் மூலம் வங்கிக்கு, 6.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வங்கி அலுவலர் கண்ணன், மஞ்சுளா, நரேஷ்குமார், பார்வதி ராமகிருஷ்ணன், நேஷனல் மெடிசின் நிறுவனம், அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயின் ஆகியோர் மீது, சிபிஐ கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று (செப்.29) சென்னை 11ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் எம்வி. தினகர் ஆஜராகி வாதிட்டார். பின்னர், அனைத்து தரப்பையும் கேட்ட நீதிபதி ஜவஹர் உத்தரவு பிறப்பித்தார். அதில், “அண்ணாசாலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளர் கண்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 லட்ச ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோன்று, நேஷனல் மெடிசின் நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயினுக்கு 10 ஆண்டுகள் சிறை, 4 லட்ச ரூபாய் அபராதம், அவரின் நிறுவனத்திற்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும், மஞ்சுளா என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஒரு லட்ச ரூபாய் அபராதம், பார்வதி ராமகிருஷ்ணன் என்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் இப்போது இடைத்தேர்தல் இல்லை!

ABOUT THE AUTHOR

...view details