சென்னையில் 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிதாக கூறப்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய அவரை கண்டுபிடித்து தர கோரி அவருடைய மகன் மணிவண்ணன், போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதோடு தந்தையை கண்டுபிடித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆதிகேசவன் மாயமானது தொடர்பான வழக்கை பூக்கடை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மணிவண்ணன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் என். ஆனந்த வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.