சென்னை:வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது அபு. இவரது மனைவி குர்ஸிதா பேகம் ( வயது 43). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பல மருத்துவமனைகளில் குர்ஸிதா பேகம் சிகிச்சை பெற்றார்.
ஆனால், நோய் குணமடையவில்லை என்பதால் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக முகமது அபு, தனது மனைவி குர்ஸிதா பேகத்தை அழைத்துக் கொண்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்துக்கொண்டிருந்தார்.
விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். இதை அடுத்து, கணவர் பதற்றத்துடன் விமான பணிப்பெண்களிடம் கூறினார். அவர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர்.உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைக்கும்படி கூறினார்.