சென்னை அண்ணாநகர் ஆர் பிளாக் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிக்கைகாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 30 சவரன் நகைகளை திருடி சென்றனர்.
அண்ணாநகர் கொள்ளை வழக்கு: பெங்களுரூ இளைஞர்கள் கைது - பெங்களுரூ இளைஞர்கள் கைது
சென்னை: அண்ணாநகர் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இரண்டு பெங்களுரூ இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து அரை கிலோ தங்கம், ரூ. 10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பெங்களுரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பெங்களுரூ சென்ற தனிப்படை காவல்துறையினர், வில்லாகார்டன் பகுதியை சேரந்த பாரத்(39), ஆட்டோ ஓட்டுநர் காசிகுமார்(32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 449 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள், 65 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகள், ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.