தமிழர்கள் கலாசாரத்தை சீரழிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்து, அதனைத் தொகுத்த வழங்கும் நடிகர் கமல் ஹாசனை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
பிக்பாஸை தடை செய்து, கமலை கைது செய்க- புகாரளித்த வழக்கறிஞர் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடைசெய்து, அதனைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசனை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு வழக்கறிஞர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
ban biggboss and arrest kamalhassan petition given to cm cell
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்கள் கலாசாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கக் கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சி ஒரு விபச்சார விடுதியாக மாறி செயல்படுகிறது. எனவே, தமிழ்நாட்டு கலாசாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும். நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாசனை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.