தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதி தீவிர புயலாகிறது ஃபானி! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் - balachandran press meet

சென்னை: ஃபானி புயல் நாளை அதி தீவிர புயலாக மாற இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

balachandran

By

Published : Apr 29, 2019, 2:33 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஃபானி புயல் நாளை அதி தீவிர புயலாக மாறி வட தமிழ்நாடு, ஆந்திரா அருகே 300 கி.மீ. தொலைவில் வர வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

மேலும், நாளை (ஏப்ரல் 30), மே 1 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details