சென்னை:திருவண்ணாமலை ஆரணி, ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த புவனேஸ்குமார் பாஜக பிரமுகராக உள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, இவரது உறவினர் வசந்தி என்பவருக்கு ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் ரூ.50 லட்சம் வாங்கி உள்ளார்.
எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக சொல்லி மோசடி:
ஆனால், வாக்குறுதி அளித்த படி சீட் வாங்கி கொடுக்கவில்லை என்றும்; பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார் என்றும் நரோத்தமன் மீதும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை டி.வி.பிரசாத் மீதும் சென்னை பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பிணை ரத்து:
இந்நிலையில் அவர்கள் இருவரும் பிணைகோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் இருவருக்கும் பிணை வழங்க முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இருவரின் பிணை மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'இங்க என்ன ஜெசி ஜெசின்னு சொல்லுதா?' காணாமல் போன ஜெசி பூனைக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டி