தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.இ., பி.டெக் படிப்புக்கான விண்ணப்பத்திற்கு  மற்றவர் தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்! - B.Tech

சென்னை: பி.இ., பி.டெக் படிப்புக்கான விண்ணப்பத்திற்கு மற்றவர் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டாம் என, தொழில்நுட்ப இயக்குனரகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப இயக்குநரகம்

By

Published : May 1, 2019, 8:57 PM IST

Updated : May 2, 2019, 9:42 AM IST

பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இன்று தொடங்கி , மே 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்நுட்ப இயக்குனரகம் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், "பி.இ., பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாணவரின் பெயர், மாணவரின் மின் அஞ்சல், தொலைபேசி எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீடு வேண்டுமானால் அதற்கான விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம் அல்லது தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி சேர்க்கை மையத்தில் வங்கி வரைவோலை(டி.டி) அளிக்கலாம்.

அனைத்து தகவல்களுக்கும் மாணவர்கள் அளிக்கும் தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். எனவே மற்றவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் அளிப்பதை மாணவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated : May 2, 2019, 9:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details