இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் ராஜா, செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசு நவம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி ஆயோக் அமைப்பு மருத்துவக் கல்வி, பொதுமக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகிய எல்லாத் துறைகளையும் நவீன மருத்துவம், ஆயூஷ் மருத்துவமுறையை கலந்து 2030இல் ஒரே கலவை முறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
எனவே இந்த அரசாணையை உடனடியாக ரத்துசெய்து அரசு திரும்ப பெறவேண்டும். மேலும் நிதி ஆயோக் அமைத்துள்ள மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்கும் விபரீதமான குழுக்களை கலைக்க வேண்டும்.