ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயோத்தி தீர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் காவலர்கள்...! - அயோத்தி வழக்கு தீர்ப்பால் பலத்த பாதுகாப்பு

சென்னை: நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று வழங்கப்படுவதால் சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

chennai police security
author img

By

Published : Nov 9, 2019, 10:20 AM IST

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என இந்து அமைப்புகள் குரல் எழுப்பிவருகின்றன. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இதையடுத்து, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் இந்து அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்குமிடையே பிரச்னை இருந்துவருகிறது.

இது தொடர்பாக நிலம் யாருக்குச் சொந்தம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் காவலர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தனியார் விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், மசூதி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் சோதனை செய்த பின்னரே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details