சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. முருகப்பா குழுமமும், காவல் துறையும் இணைந்து தயாரித்துள்ள "உஷார் பயன்பாட்டாளர்கள், சகலகலா பூச்சாண்டி" என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வெளியிட முருகப்பா குழும தலைவர் முருகப்பன் பெற்றுக்கொண்டார்.
நம்பிக்கை வைப்பது ஒரு தவறா: ஏ.கே.விஸ்வநாதன் - விழிப்புணர்வு குறும்படம்
சென்னை: தற்போதைய சூழலில் நம்மிடையே உள்ள நம்பகத்தன்மை குறைந்து வருகிறது, நம்பிக்கை வைப்பது ஒரு தவறா என்ற நிலை உருவாகியுள்ளது என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
பின்னர் மேடையில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், "தற்போதைய சூழலில் நம்மிடையே இருப்பவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. நம்பிக்கை வைப்பது தவறா என்ற நிலை தற்போது வந்துவிட்டது. நேரில் பார்த்து பழகாமல் யார் என்று தெரியாதவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாகி அவர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர் என்றார்.
மேலும் அவர், சமூக வலைதளங்கள் நல்ல விஷயம், அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நாம் புகைப்படத்தை பகிரும்போதும், மற்றவருடன் பேசும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதேபோல் ஏடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனைக்கான தரவுகளை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.சமூக வளைதளங்களை எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் கையாள வேண்டும் என தெரிவித்தார்.