தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளைஞர்கள் மத்தியிலான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் காணொலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டு, சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/21-September-2021/13123063_drug1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/21-September-2021/13123063_drug1.jpg

By

Published : Sep 21, 2021, 6:22 AM IST

சென்னை: இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பயன்பாட்டால் நாள்தோறும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளிலும் 30 நிமிட காணொலி மூலம் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் துறையினருக்கு உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவல் ஆணையர் வெளியிட்ட அறிக்கை

அதில், “போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாளொன்றுக்கு மூன்று பள்ளி, கல்லூரிகள் வீதம், அந்தந்தப் பகுதிகளில் உள்ள உதவி ஆணையர், ஆய்வாளர்கள் ஆகியோர் செயல்படுத்த வேண்டும்.

மேலும் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவ பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்து, பள்ளி, கல்லூரிகளை போதைப்பொருள் பயன்பாடற்ற பகுதியாக உறுதிசெய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி

ABOUT THE AUTHOR

...view details