உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், இந்த வைரஸின் அறிகுறி அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழ்நாடு அரசு உத்திரவின் பேரில், இந்த வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்து, அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி தனி ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. இதனால், அதிகளவில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
விமான நிலையத்தில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு - சென்னையில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
சென்னை: விமான நிலைய காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
இறுதியில், விமான நிலைய காவல் உதவி ஆணையர் நடேசன், காவலர்களுக்கும், துப்பரவுப் பணியாளர்களுக்கும், டேக்சி ஓட்டுநர்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.
இதையும் படிங்க:கரோனா பெருந்தொற்று: பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு