சென்னை: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, 5 கிலோமீட்டர் தொலைவு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த ஓட்டத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - tamilnadu news
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
தொடர்ந்து இருவரும் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். இந்த நிகழ்வில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:புதிதாக திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை: மகிழ்ச்சியும் கோரிக்கையும்