தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லாவரம் சாலையில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு படம்.... - Chennai District News

சென்னை: பல்லாவரம் சாலையில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு படம் வரையப்பட்டது.

கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு படம்
கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு படம்

By

Published : May 6, 2020, 12:59 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் பாதிப்பு பெருமளவில் இருப்பதினால் மூன்றாவது முறையாகவும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு தளர்வு அளித்துள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் சாலையில் கடைகளில் கூட்டமாக வருவதால் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதால் ஆங்காங்கே காவல் துறையினர், தன்னார்வலர்கள் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பல்லாவரம் சாலையில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு படம்
இந்நிலையில் சென்னை பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட, அஸ்தினாபுரம் ராஜேந்திரபிரசாத் சாலையில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் S.P.எபிநேசர் மற்றும் துரைசம்பத் ஆகியோரால் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு படம் வரையப்பட்டது. இப்படமானது காவல் துறை, மருத்துவத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் பொதுமக்களை கரோனா தொற்று பரவலிலிருந்து காப்பாற்றுவது போல் வரையப்பட்டது.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் வரியை உயர்த்திய மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details