தமிழ்நாடு

tamil nadu

Surveillance camera: 'பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா அவசியம்'

By

Published : Nov 24, 2021, 8:30 AM IST

Updated : Nov 24, 2021, 12:59 PM IST

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (Surveillance camera) அவசியம் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த பெருநகர் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், அடல் டின்கிரிங் ஆய்வகத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.

பிறகு செய்தியாளரிடம் அவர் பேசுகையில், "நவம்பர் மாதத்திலிருந்துதான் பள்ளிகள் தொடங்கப்பட்டன என்ற காரணத்தினால் மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் அடைய கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் பொதுத்தேர்வைச் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது.

அமைச்சர் அன்பில் மகேஷ்

மேலும் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (Surveillance camera) அவசியம். அதேசமயம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அதே விழிப்புணர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களிடமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி, தனியார் பள்ளியின் நம்பகத்தன்மையை வெளிக்கொணர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர் செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஏஒய்.4.2வகை கரோனா அச்சுறுத்தல்... பள்ளிகள் மூடல்...

Last Updated : Nov 24, 2021, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details