தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 எழுத்தாளர்களுக்கு விருது! - முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 21 எழுத்தாளர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்ற எழுத்தாளர் அறிவரசன்
விருது பெற்ற எழுத்தாளர் அறிவரசன்

By

Published : Jul 9, 2021, 12:47 PM IST

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் எழுத்தாளர்களுக்கு புத்தக வெளியீட்டுக்காக 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆண்டுதோறும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை.09) முதலமைச்சர் ஸ்டாலின் 21 எழுத்தாளர்களுக்கு முதல் தவணையாக 20 ஆயிரம் ரூபாய் பணம், விருதுகளை வழங்கினார்.

இது தொடர்பாக விருது பெற்ற எழுத்தாளர் அறிவரசன் கூறுகையில், "முதலமைச்சரிடம் விருது வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இந்தத் தொகை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாக உள்ளது.

தற்போது வழங்கிவரும் 40 ஆயிரம் ரூபாயை 75 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:ஒலிம்பிக் வீரர்களிடம் உரையாடும் மோடி!

ABOUT THE AUTHOR

...view details