தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2020ஆம் ஆண்டில் அதிக லாபம் பார்த்த ஆவின்! - aavin profit

சென்னை: ஆவின் பால், பால் உப பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விற்பனையால் சென்ற நிதி ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின்
ஆவின்

By

Published : Dec 8, 2020, 6:47 AM IST

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆவினில் பால் விற்பனை மற்றும் பால் உப பொருட்களின் விற்பனை, இதர விற்பனைகள் அதிகரித்து விவசாயிகளின் வாழ்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டு இருக்கின்றது.

ஆவினின் பணப்பரிவர்த்தனை 2019-2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பால், பால் உப பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் சுமார் ரூ.335 கோடியே 821 லட்சத்திற்கு விற்பனையானது.

ஆவின் பொருட்கள்

நடப்பு நிதியாண்டில் பண பரிவர்த்தனையில் 2020-2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பால், பால் உப பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விற்பனை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் ரூ. 2392.95 கோடியும், இணையத்தின் மூலம் ரூ.1242.54 கோடியும் என மொத்தம் ரூ.3635.50 கோடி ஆகும். ஆக சென்ற நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளது.

கடும் புயலிலும், காற்றிலும், மழையிலும் மற்றும் கரோனா தொற்று காலத்திலும் மக்கள் சேவையில் ஆவினின் பங்கு மகத்தானதாக அமைந்துள்ளது. இதனால் ஆவினுக்கு கூடுதலான மக்களின் வரவேற்பும், நன்மதிப்பும் அதிகமானதால் ஆவின் நிறுவனத்திற்கு லாபம் அதிகரிப்பதோடு விவசாயிகளின் நம்பிக்கையும் அதிகம் பெற்றுள்ளது" என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காபி டே சிஇஓ பொறுப்புக்கு சித்தார்த் மனைவி மாளவிகா தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details