ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் 225 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்கள். இந்த ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடுதான் இந்தப் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
இவர்களின் பணி என்பது மின் இணைப்பிற்குத் தேவையான குழி தோண்டுதல், கம்பம் நடுதல், ஒயர் இழுத்தல் போன்றவையாகும். இத்தகைய கடினமான பணிகளைச்செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 170 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்தபடி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கூறி ஆவடியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பிச்சையெடுக்கும் போரட்டம் கஜா, தானே புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் போது சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யவும் புதிய மின்கம்பங்களை நடுவதற்கும் இரவு பகல் பாராமல் உழைத்தோம். அவ்வாறு உழைத்தவர்களின் நிலை இன்று கேள்விக்குறியாக உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:துரைமுருகன் பங்கேற்காத திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்