சென்னை அடுத்த ஆவடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் முகமது அபூபக்கர் (60). இவர் ஆவடி நேரு பஜாரில் உள்ள தையல் கடையில் பணி புரிந்துவந்தார்.
இந்நிலையில், பணி முடித்து ஆவடி ராணுவ சாலை வழியாக வீட்டிற்கு செல்ல கன்னிகாபுரம் பகுதியில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அம்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி அபுபக்கர் மீது மோதியது.
லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அபுபக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து உதவி ஆணையர் ஜெயகரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வலையங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்ற மாணவி லாரி மோதி உயிரிழப்பு!