சென்னை:ஆவடி காமராஜ் நகரில் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இதில் ஸ்ரீ ராமநவமி மற்றும் பாபாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஸ்ரீராம் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் ஸ்ரீ சாய் பாபாவிற்கு காகட ஆரத்தி அபிஷேகம், கணபதி ஹோமம், பகல் ஆரத்தி, பால்குட ஊர்வலம் மற்றும் 1008 சுமங்கலி வஸ்திரம், மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை நடிகர் ஸ்ரீராம் வழங்கினார்.