சென்னையை அடுத்த ஆவடி அருகே கனரக வாகன தொழிற்சாலை (HVF) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் (48) என்பவரை விடுவிப்பதற்காக திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா என்ற வீரர் வந்துள்ளார்.
அப்போது, இரு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், தனது துப்பாக்கியைக் கொண்டு சின்ஹா சுட்டதில், தலையில் ஆறு குண்டுகள் பாய்ந்து கிரிஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.