ஆவடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மாநகராட்சியில் புகார் அளித்துவந்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாபர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆயிரம் ஆயில் பந்துகள்...! - ஆவடி மாநகராட்சி - People suffering from dengue fever
சென்னை: ஆவடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேங்கி நிற்கும் மழைநீரில் ஆயிரம் ஆயில் பந்துகள் போடப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும் அரசுக்குச் சொந்தமான நிலத்திலும் தனியாருக்குச் சொந்தமான காலி நிலத்திலும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் ஆயிரம் ஆயில் பந்துகளைப் போட்டனர்.
இது குறித்து ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாபர் கூறும்போது, 'வரும் நாள்களில் இன்னும் இரண்டாயிரம் ஆயில் பந்துகள் தேங்கி நிற்கும் மழைநீரில் வீசி டெங்கு கொசு புழுக்கள் ஒழிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியகுளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 சிறுமிகள் பாதிப்பு!