தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் ஆட்டோ கேஸ் நிலையம் முற்றுகை - chennai

அனகாபுத்தூர் அருகே தனியார் ஆட்டோ எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஊழியர்கள் எரிவாயு திருட்டில் ஈடுபடுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

d
d

By

Published : Aug 9, 2021, 6:24 PM IST

சென்னை:அனகாபுத்தூர் காமராஜர் சாலையில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆட்டோ எரிவாயு நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு எரிவாயு நிரப்புவது வழக்கம்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

முற்றுகை

50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு திரண்டு எரிவாயு நிரப்பும் நிலையத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப எரிவாயு முழுமையாக நிரப்பாமல் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதாக ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை

காவல்துறை உறுதி

பின்னர் அங்கு சென்ற சங்கர் நகர் காவல்துறையினர் எரிவாயு நிரப்பும் நிலைய உரிமையாளரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சைடஸ் காடில்லா தடுப்பூசிக்கு இந்த வாரம் ஒப்புதல்?

ABOUT THE AUTHOR

...view details