கரோனா பாதிப்பு காரணமாக, தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆட்டோ ஓட்டுநர்கள் ஐந்து மாதங்களாக வேலையின்றி தவித்து விருகின்றனர். இந்நிலையில், இன்று (ஆக.18) ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "நலவாரியம் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும். நிகழாண்டு(2020) மார்ச் முதல் ஆட்டோ எப்சி, பர்மிட், இன்சுரன்ஸ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுக்கு அவகாசம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களிடம் கட்டாய கடன் வசூல் செய்யும் தனியார் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராவதற்கு வருவாய்த்துறை ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் சான்று கேட்கும் நடைமுறையை கைவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் கடன் வழங்க வேண்டும்.