சென்னைமாங்காடு பரணி புதூரைச் சேர்ந்தவர், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன். இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு பைனான்ஸ் நிறுவனம் மூலம் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார்.
ஆனால், மாதாந்திர கடன் தொகையை சரிவரச் செலுத்தவில்லை.
இந்த நிலையில் வெங்கடேசன் அந்த வாகனத்தை எம்ஜிஆர் நகரில் வசிக்கும் தனது நண்பர் பெயிண்டர் ராஜா என்பவர் மூலம் அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரிடம் விற்றுள்ளார்.
மாதாந்திர தவணையும் செலுத்தாமல், வாகனத்தையும் திருப்பித் தராமல் இருந்ததால் பைனான்ஸ் நிறுவனம் வெங்கடேசனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இதையடுத்து வெங்கடேசன் ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். இரு சக்கர வாகனத்தை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
வாகனத்தை வாங்கிய முருகன் தற்போது எங்கு இருக்கிறார் என ராஜாவிடம் கேட்டுள்ளார். முருகன் தற்போது இருக்கும் இடம் எனக்குத் தெரியாது என ராஜா பதிலளித்துள்ளார். ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் பரத், ஜெயராஜ் ஆகிய 3 பேரும் நேற்று நள்ளிரவு எம்ஜிஆர் நகர் வந்துள்ளனர்.