சென்னை:அம்பத்தூர் எஸ்டேட் ஐசி.எப் காலனி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு அபிராமி என்ற மனைவியும், மூன்று வயதில் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் பாக்கியராஜ் இன்று (ஜூலை.12) காலை 11 மணியளவில் தனது நண்பர் பிரதீப்புடன் ஆட்டோவில் அயப்பாக்கம் பகுதியிலுள்ள ஜேஹூமர் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள காலியான பகுதிக்கு சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
ரோந்து காவலருடன் வாக்குவாதம்
அப்போது அவ்வழியாக சென்ற ரோந்து காவலர் சந்தோஷ் பொது இடத்தில் ஏன் குடிக்கிறீர்கள் எனக் கேட்டு, உடனடியாக கிளம்புமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.
மேலும் இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டு முகவரியைக் காவலர் கேட்டபோது, அவருடன் பாக்கியராஜ் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலை
அப்போது, திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பாக்கியராஜ் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியராஜை காவலர் சந்தோஷும், அவரது நண்பர் பிரதீப்பும் இணைந்து தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு தூண்டினாரா காவலர்?