சென்னை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆஸ்திரேலியா குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ஆஸ்திரேலியா துணைத் தூதரகம் சார்பில் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புத்தகங்களை வழங்கியது.
சென்னை பல்கலைக்கழக ஆய்வுக்கு ஆஸ்திரேலியா உதவி..! - ஆஸ்திரேலியா ஆய்வு
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் ஆஸ்திரேலியா குறித்த ஆய்வினை மேற்கொள்ள ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை ஆஸ்திரேலியா துணை தூதரகம் வழங்கியுள்ளது.
இந்த புத்தகங்களை, சென்னை ஆஸ்திரேலியா துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆண்ட்ரிவ் கொலிஸ்டர் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமியிடம் வழங்கினார்.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை பல்கலைக் கழகத்தில் ஆஸ்திரேலியா குறித்த ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்குத் தேவையான எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆஸ்திரேலியா துணை தூதரகம் வழங்கியுள்ளது. இதனால், மாணவர்கள் ஆஸ்திரேலியா குறித்த ஆய்வினை மேலும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.