சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் சிராஜ் நிஷா (47) . கணவனை இழந்த இவர் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றார்.
கடந்த 14ஆம் தேதி இவரது இரண்டு மகன்களும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றனர். நேற்றிரவு (ஜன.17) நிஷா வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் இருதயராஜ் (40) என்பவர் குடிபோதையில் பாலியல் வன்புணர்வு முயற்சி செய்தார்.