தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - இளைஞர் கைது - ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

சென்னை: வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Attempted robbery by breaking into ATM machine
Attempted robbery by breaking into ATM machine

By

Published : Oct 11, 2020, 8:51 PM IST

குற்றச் சம்பவங்களை தடுக்க சென்னை மாநகராட்சி முழுவதும் இரவு நேர ரோந்து வாகனங்களை காவல் துறையினர் அதிகரித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் இரவு நேரங்களில் எளிதில் தொடர்பு கொள்ள சமூக வலைதளத்தில் காவல்துறையினரின் தொலைபேசி எண்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 10) இரவு ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் ஒருவர் பணத்தை திருட முயன்றதாக ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் நந்தகோபால், ஆயுதப்படை காவலர் வெற்றி செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவரை கைது செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் (28) என்பது தெரியவந்தது. அதன் பிறகு அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details