தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்பகை காரணமாக கொலை முயற்சி: 4 பேர் கைது! - பல்லாவரம் காவல்துறையினர்

சென்னை: பல்லாவரத்தில் முன்பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்பகை காரணமாக கொலை முயற்சி: 4 பேர் கைது!
முன்பகை காரணமாக கொலை முயற்சி: 4 பேர் கைது!

By

Published : Dec 12, 2020, 7:46 AM IST

Updated : Dec 12, 2020, 9:33 AM IST

சென்னை பல்லாவரம் அடுத்த தண்டுமாரியம்மன் கோயில் தெருவில் இஸ்மாயில்(45) என்பவர் நேற்று முன் தினம் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், இஸ்மாயில் மீது பெட்ரொல் குண்டு வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் தலை மற்றும் கையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இஸ்மாயிலை பொதுமக்களும், பல்லாவரம் காவல்துறையினரும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல்துறையினர், சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த ரிஸ்வான்(30) என்பது தெரிய வந்தது. இந்த கொலை முயற்சி தொடர்பாக ரிஸ்வானின் நண்பர்களான புழலைச் சேர்ந்த நவீன்குமார்(22), மணலியைச் சேர்ந்த கிஷோர்(22), மாதவரத்தைச் சேர்ந்த விஜய்(24) ஆகிய மூன்று பேரை பல்லாவரம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இஸ்மாயிலின் உறவினர் ஒருவருக்கும் ரிஸ்வானுக்கும் உள்ள முன்பகை காரணமாக கொலை செய்ய வந்ததாகவும், சமந்தப்பட்ட நபர் சிக்காததால் இஸ்மாயிலை தாக்கியது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது!

Last Updated : Dec 12, 2020, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details