தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தில் வறுமை - ஏடிஎம் திருட்டில் ஈடுபட முயன்றவர் கைது - ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி

கடன் தொல்லையால் ஏடிஎம் இயந்திரத்தை ஸ்க்ரூ டிரைவர் மூலமாக உடைக்க முற்பட்ட மாநகராட்சி ஊழியரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தில் வறுமை - ஏடிஎம் திருட்டில் ஈடுபட முயன்றவர் கைது
குடும்பத்தில் வறுமை - ஏடிஎம் திருட்டில் ஈடுபட முயன்றவர் கைது

By

Published : Jan 26, 2022, 9:28 AM IST

Updated : Jan 26, 2022, 8:44 PM IST

சென்னை: சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (ஜன 25) உடைக்க முயற்சித்துள்ளார்.

இது குறித்து உடனடியாக சேத்துப்பட்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் விரைந்தனர். காவல்துறையினரை கண்டவுடன் மர்ம் நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது முகக்கவசம், கையுறை அணிந்த நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று, முடியாததால் தப்பியோடுவது பதிவாகி இருந்தது.

குடும்பத்தில் வறுமை - ஏடிஎம் திருட்டில் ஈடுபட முயன்றவர் கைது

பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் திருட்டில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக ரஞ்சித் குமார் பணிபுரிந்து வருவதும், மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் 5 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டு குடும்பமாக இருப்பதால் பிரச்சினை நிலவி வருவதால் தனது மனைவி, குழந்தைகளுடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ ஆசைப்பட்டதாகவும் பணமில்லாததால் திருட திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் குப்பை வண்டி எடுத்து இரவு நேரத்தில் செல்லும்போது காவலாளி இல்லாத ஏடிஎம் இயந்திரத்தை நோட்டமிட்டு, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருடிய பணத்தில் கார் வாங்கிய திருடன்

Last Updated : Jan 26, 2022, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details