தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க முயற்சி - நீர் வளத்துறை தகவல் - நீர் வளத்துறை தகவல்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நீர் வளத்துறைக்கொள்கை விளக்கக் குறிப்பில் தகவலளிக்கப்பட்டுள்ளது.

Meghadau Dam  Attempt to prevent construction of Meghadau Dam  construction of Meghadau Dam  tamil nadu assembly  மேகதாது அணை  மேகதாது அணை கட்டுவதை தடுக்க முயற்ச்சி  நீர் வளத்துறை தகவல்  தமிழ்நாடு சட்டப்பேரவை
நீர் வளத்துறை தகவல்

By

Published : Apr 6, 2022, 11:02 PM IST

சென்னை: நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் வருவாய்க் கணக்கில் 3,050,69,98,000 ரூபாய், மூலதனக் கணக்கில் 4,282,56,39,000 ரூபாய், கடன் கணக்கில் 10,00,000 ரூபாய் ஆகியவற்றுக்கு மேற்படாத தொகைகள் அரசுக்கு வழங்கப்பெற வேண்டும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வளத்துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

அதில் சில முக்கிய அம்சங்கள்,

* பெண்ணையாறு வெள்ள உபரிந்ரை நெடுங்கல் அணைகட்டிலிருந்து புதிய கால்வாய் மூலம் பாலாற்றுடன் இணைத்து கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வழியோர ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம், 96 லட்சம் ரூபாய்க்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

* கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை 399 கோடிக்கான மதிப்பானது அரசியல் ஆய்வு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு திட்டம் அமைக்கும் பணி நடைபெறும்.

* தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நடுவர் மன்றத்தின் இறுதியாணை மற்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக கர்நாடகா, மேகதாது என்னுமிடத்திலோ அல்லது கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகையில் வேறு ஏதேனும் இடத்திலோ அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நீர்வளத்துறையில் நீர்நிலைகளில் இதுவரை 35 ஏக்கர் பரப்பில் சீமை கருவேலமரங்கள் அகற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதற்கான மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கல் காட்டூர் மற்றும் தட்டாமஞ்சி ஆகிய இரட்டைஏரிகளில் உள்ளம் கொள்ளளவினை அதிகரிக்க 62.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5804. 38 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும்.

* அத்திக்கடவு- அவிநாசி நீரூற்று திட்டம் 83 விழுக்காட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: குற்றவியல் மசோதா 2022 மாநிலங்களவையில் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details