தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலரை தாக்கி வழிபறி செய்ய முயற்சித்த இருவர்: 3 தனிப்படை அமைத்து போலீஸ் வலைவீச்சு!

சென்னை: காவல் ஆணையர் அலுவலகம் அருகே காந்தி - இர்வின் மேம்பாலத்தில் பெண் காவலரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற நபர்களை பிடிக்க காவல் துறையினர் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

By

Published : Sep 1, 2020, 7:25 PM IST

பெண் காவலரை தாக்கி வழிபறி செய்ய முயற்சித்த இருவர்
பெண் காவலரை தாக்கி வழிபறி செய்ய முயற்சித்த இருவர்

சென்னை திருவல்லிக்கேணி மாவட்ட குற்றப் பிரிவில் (நுண்ணறிவு) பெண் காவலராக பணிப்புரிந்து வருபவர்கள் சூர்யவதனி, யாஸ்மின். இவர்கள் நேற்றிரவு (ஆக. 31) 9.30 மணியளவில் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சிந்தாதிரிப்பேட்டை பகுதி வழியாக வந்துள்ளனர்.

அப்போது சிந்தாதிரிப்பேட்டை - எழும்பூர் சந்திப்பில் உள்ள கூவம் பாலம் அருகே போதையில் இருந்த இருவர் காவலர்களை வழிமறித்துள்ளனர். இருவரும் காவலர்கள் என கூறியும் வழிமறித்தவர்கள் தகராறு செய்துள்ளனர். உடனே காவலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

காந்தி - இர்வின் சாலை பாலம்

சூர்யவதனியை அவரது கணவர் வந்து அழைத்து செல்வார் என்பதால் காந்தி - இர்வின் பாலம் அருகே இறக்கி விட்டுவிட்டு, காவலர் யாஸ்மின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

காவலர் சூர்யவதனி, காந்தி இர்வின் பாலத்தில் தனது கணவர் வருகைகாக காத்திராமல், காவல் ஆணையரகம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது, தகராறு செய்த நபர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

காவலர் சூர்யவதனி தனியாக நடந்து வருவதை பார்த்து, அவரிடம் செயின் பறிக்க முயற்சித்துள்ளனர். அவர் தடுக்கவே, வாகன சாவியால் சூர்யவதனியின் முகத்தில் குத்தியுள்ளனர். இதில் அவர் வலியால் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், இருவரும் தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து காயமடைந்த சூர்யவதனி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக எழும்பூர் காவல் துறையினர் மூன்று தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கி, அவர்களை தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், காவலர்கள் இருவரிடமும் தகராறு செய்த நபர்கள், பின்னர் எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மதுபானக் கடையை திறக்கச் சொல்லி ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து காந்தி - இர்வின் பாலம் வழியாக வரும்போது, தனியாக வந்த பெண் காவலரை பார்த்ததும் வழிபறி செய்ய முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: காவலரை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி.யின் வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details