ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் சென்னை:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலையம் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே சிலர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்ததாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர், தகராறு நடைபெற்ற இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஆத்திரமடைந்த அந்த கும்பல், ரோந்து பணியில் இருந்த போலீசாரை கண்மூடித்தனமாக கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இந்த பிரச்சினையில், தலையில் காயம் அடைந்த காவலர் நரேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவலர் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், காவலரை தாக்கி தப்பி சென்ற மர்ம நபர்களை திருமுல்லைவாயல் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், வட மாநில தொழிலாளர்கள் காவலரை தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் காவலர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையம் அருகே காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:"உதயநிதியை விட கருக்கா வினோத் மேல்.. அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுங்கள்..." -அண்ணாமலை!