சென்னை: வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிக்கையின்படி, “வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
30.04.2022 மற்றும் 01.05.2022 வரை தென் தமிழ்நாடு மற்றும் வட உள்தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.