சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜீனஸ் சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடைக்க முயற்சி செய்துள்ளார். பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்யும் போது, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரியவர உடனடியாக, மும்பையிலிருந்து சைதாப்பேட்டை காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி - சென்னை எஸ்பிஐ வங்கியில் கொள்ளை
சென்னை: சைதாப்பேட்டை ஜீனஸ் சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடைக்க முயற்சி செய்துள்ளார்.

ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி
காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் அங்கிருந்து அடையாளம் தெரியாத நபர் தப்பிச் சென்றுள்ளார். வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை காவல் துறையினர் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:பிரபல நகைக் கடையில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை!