தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி தலைமை அலுவலகத்தை ஏமாற்றி ஏடிஎம்மில் மோசடி - வங்கி தலமை அலுவலகம்

சென்னை: தி.நகர் ஏடிஎம்மில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ATM
ATM

By

Published : Dec 3, 2020, 6:30 PM IST

சென்னை தி.நகரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேனல் மேனேஜர் டானியல் என்பவர் தி நகர் துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத்திடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் நவம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னை தியாகராய நகர் நடேசன் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில், அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளதாகவும், ஆனால் மும்பையில் இருக்கும் ஏடிஎம் தலைமை அலுவலகத்திற்கு ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வராமலேயே வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் அளித்து இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து மும்பை ஏடிஎம் தலைமை அலுவலகம் சோதனை செய்து, ஏடிஎம்மில் பணம் வராமல், அடையாளம் தெரியாத நபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறிய பணத்தை மீண்டும் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்பு சோதனை செய்து பார்த்ததில் மும்பை ஏடிஎம் தலைமை அலுவலகத்தை மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஏடிஎம் சிசிடிவியை ஆய்வு செய்தபோது முதலில் கார்டை பயன்படுத்தி பணத்தை வெளியில் எடுத்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் எவ்வாறு எஸ்.பி.ஐ மும்பை தலைமை அலுவலகத்தை மோசடி செய்தார்கள் என பார்க்கும்போது வங்கி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தவுடன் வங்கி ஏடிஎம் மிஷினில் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன்பிறகு ஏடிஎம் மையத்தில் இருந்தவாறு அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் மும்பை தலைமை அலுவலகத்துக்கு அந்த நபர்கள் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது.

மும்பை தலைமையிடத்தில் இருந்து வங்கி அலுவலர்கள் ஆன்லைனில் ஆய்வு செய்தபோது, சென்னை தியாகராய நகர் நடேசன் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பழுதாகி இருப்பதுபோல ஆன்லைனில் காட்டியுள்ளது. இதனை நம்பி மும்பை தலைமையகத்தில் இருக்கும் வங்கி அலுவலர்கள் அந்த நபர்கள் அளித்தது போலி புகார் என்று தெரியாமல், பணத்தை வங்கி கணக்கில் திரும்ப செலுத்தி ஏமாந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த நபர்கள் பயன்படுத்திய கணக்கை ஆய்வு செய்த போது ஹரியானா மாநிலத்தில் வடமாநிலத்தவர்களின் வங்கி கணக்கு இருப்பதும் அது போலி முகவரியில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கு என்பதை அறிந்தும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதே போன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் வங்கி ஏடிஎம்மில் நடந்திருப்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேர், இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி தலைமை அலுவலகத்தையே ஏமாற்றி மோசடி செய்த விவகாரம் வங்கி அலுவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details