தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதரை வைக்கும் குளத்தை ஏன் முறையாக பராமரிக்கவில்லை - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி - Athi varadhar

சென்னை: குளத்தை சுத்தம் செய்யும் வரை அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள பகுதியில் மட்டும் தண்ணீரை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court

By

Published : Aug 16, 2019, 9:32 PM IST

சென்னை தி.நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் அத்திவரதர் சிலை 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக, வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்நிலையில், அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தை மிகவும் மோசமான முறையில் பராமரிக்கின்றீர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் தொல்லியல்துறை ஏன் பதிலளிக்கவில்லை. தண்ணீரின் தரம் குறித்து திங்கட்கிழமை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும். அத்திவரதரை குளத்தில் இறக்கி வைத்தவுடன் அந்த அறையில் மட்டும் சுத்தமான தண்ணீரை நிரப்பலாம் என உத்தரவிட்டு இவ்வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details