சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஐந்து வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார்.
மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது - சென்னை தந்தை மகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை: மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது father sexually abuse daughter case](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5966943-thumbnail-3x2-ja.jpg)
father sexually abuse daughter case
இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படியுங்க: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது
Last Updated : Feb 6, 2020, 1:03 PM IST