சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த கொரியா் பார்சல்களை சென்னை விமான நிலைய சரக்கக சுங்கத் துறை அலுவலகத்தில், சுங்க அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். அதில் சிங்கப்பூரில் உள்ள ஒரே முகவரி இருந்த அந்த ஐந்து பாா்சல்களில் புடவை, சட்டை, சுடிதார் போன்ற ஆடைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
அலுவலர்களுக்கு அந்த பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்படவே, அதனைத் தனியே எடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்தப் பார்சல்களிலிருந்த சென்னை முகவரிகள் போலியானவை என்று தெரியவந்தன.
புடவைகள் அடியில் வெளிநாட்டுப் பணம் இதையடுத்து அந்தப் பார்சல்களைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த புடவை, சட்டை உள்ளிட்ட துணிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர், யூரோ, சிங்கப்பூர் டாலர், ரியால் உள்ளிட்ட வெளிநாட்டுப் பணம் ரூ.1.06 கோடியும், இந்தியப் பணம் ரூ.30 லட்சமும் (அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகள்) மொத்தம் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல்செய்தனர். புடவைகள் அடியில் வெளிநாட்டு பணம் அதோடு சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்தக் கொரியர் பார்சல்களை தனியாா் கொரியர் அலுவலகத்திற்குப் பதிவுசெய்து அனுப்பவந்தவர்கள், அவர்கள் வந்த வாகனங்களை ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடித்து, சென்னையைச் சோ்ந்த இரண்டு பேரை கைதுசெய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் துணிமணிகள் அவா்கள் புகைப்படக் கலைஞா்கள் என்று தெரியவந்துள்ளது, மேலும் விசாரணையில் இந்தப் பணம் ஹவாலா பணம் என்று தெரியவரவே பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இச்சம்பவம் சென்னை விமான நிலைய சரக்ககப் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:15 லட்சம் கோடி ரூபாய்க்கு உரிமையாளரான அமேசான் ஜெஃப் பெசோஸ்