தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது! - சென்னை 6 பேர் கைது

சென்னை: மன்னிப்பு கேட்க வந்தவரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

at-chennai-6-persons-got-arrested-for-allegedly-shaving-one-persons-head
மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!

By

Published : Feb 11, 2020, 9:27 AM IST

சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அன்று மாலை தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் அவரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர்.

பின்னர் வசந்தகுமாரை தாக்கிவிட்டு அவர் தலையை மொட்டை அடித்து காலில் சூடு வைத்து கொடுமைபடுத்தி உள்ளனர். மேலும் இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது.

இந்த சம்பவம் பற்றி தலைமை செயலக காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமார் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வசந்த குமாரை கொடுமைப்படுத்திய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details