தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Rasi palan: இன்றைய ராசிபலன் -25 மார்ச், 2023! - தனுசு ராசிபலன் இன்று

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 6:22 AM IST

மேஷம்:நீங்கள் உங்கள் திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்துவீர்கள். திட்டங்களை சிறப்பாக தீட்டி, பணியில் சிறந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி, அதன் மூலம் சிறந்த பலனைப் பெறுவீர்கள். எனினும், அதற்கான அங்கீகாரம் சரியான முறையில் கிடைக்காததால், ஏமாற்றம் ஏற்படக்கூடும். தோல்விகளை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாமல் இருப்பது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ரிஷபம்:இன்று நீங்கள், விதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும், நல்லவை நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு உள்ளது. மன வருத்தம் கொள்ள தேவையில்லை. வரும் காலத்தில் நல்லவையே நடக்கும்.

மிதுனம்:நீங்கள், அனைத்து செயல்களையும், சிறந்த வகையில் செய்ய வேண்டும் என்று விரும்புபவராக இருப்பீர்கள். உங்கள் செயல்திறன் முழுவதும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செய்யும் முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் நினைவில் கொள்ளவும்.

கடகம்:நீங்கள் இன்று புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். அதனால், நீங்கள் பணியில் தீவிரமாக இருப்பீர்கள். வேலை பளுவின் காரணமாக, நீங்கள் சோர்வாக உணரக்கூடும். இதனால், உங்களுக்கு மன அழுத்தம் பதற்றமும் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது.

சிம்மம்:நீங்கள் இன்று, உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். உங்களது அகங்காரம் காரணமாக, உங்களது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த நீங்கள் தயங்குவீர்கள். உங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் உடன் பேசும்போது, இதனை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காதல் உணர்வு மற்றும் அன்பை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கும்.

கன்னி:இன்று, ஒரு இனம் புரியாத பயம் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக, இந்த பயம் அதிகரித்து கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுக்காக, அதிக செலவழிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

துலாம்:உங்கள் குழந்தைகள் சாதனை புரிவார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பெருமை கொள்வீர்கள். ஊதிய உயர்வு அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலமாக கிடைக்கும் வருமானம் ஆகியவற்றால் பணவரவு இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அல்லது காப்பீட்டு திட்டங்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்:இன்று நாள் முழுவதும் எல்லா நேரமும் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி, நீங்கள் பலியாடாக நிற்க வேண்டிய நிலை உருவாகலாம். இப்படி சங்கடமான நிலையில் இருந்து தப்பிக்க, மிகுந்த கவனத்துடன் செயல்படவும். இருப்பினும், உங்கள் வழியில் எது வந்தாலும், அதன் மூலம் நீங்கள் பாடம் கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு:வார்த்தைகளை விட, செயல்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணியை, செய்து முடிக்கும் வாய்ப்பு உள்ளது. நெடுநாட்களாக இருந்த சச்சரவுகளையும், வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மகரம்:நீங்கள் முதலில் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால், மீண்டும் முயற்சி செய்யவும். விடாமுயற்சி மற்றும் பொறுமையின் திறனை பலர் குறைவாக மதிப்பீடு செய்கின்றனர். எனினும், இந்தத் தன்மைகள் உங்களை வெற்றியடையச் செய்யும். கோபம் மற்றும் ஏமாற்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு பதிலாக நம்பிக்கையுடன், உங்கள் திட்டத்தில் மன உறுதியுடன் செயல்படவும். குறிப்பாக, நீங்கள் எதிர்பார்த்தபடி பலன் இல்லை என்றால், நம்பிக்கையை இழக்கக் கூடாது.

கும்பம்:நீங்கள் அதிக பொறுமையுடன், நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவதால், உங்களது பிரச்சினையை நீங்கள் எளிதாக தீர்த்து விடுவீர்கள். என்றாலும், உங்களை சுற்றியுள்ள நபர்கள், உங்களது இந்த தன்மை காரணமாக, பொறுப்புகளை எடுத்துக் கொள்ளாமல் நழுவி விடுவார்கள். இதனால், வேலைப் பளு அதிகரித்து உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடும்.

மீனம்:இன்று உங்களது பொறுமை மற்றும் செயல் திறன்கள் சோதித்துப் பார்க்கப்படும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு பணியிலும், நீங்கள் சோதனையை சந்திப்பீர்கள். எளிதான பணி மற்றும் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுவது கூட உங்களுக்கு கடினமாக தோன்றக் கூடும். கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற நீங்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

ABOUT THE AUTHOR

...view details