இது குறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் தணிகைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா நடவடிக்கைகளில் வழிகாட்டியாக செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசிற்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கரோனா: ஒருநாள் ஊதியம் வழங்கும் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம்
சென்னை: தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினர்.
association-of-veterinary-aid-physicians
எங்களது சங்க உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் அவர், தமிழ்நாடு அரசின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ்: தொகுதி மக்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு