சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்( 45). இவர் அண்ணா சாலை ராயலா டவரில் எட்டாவது மாடியில் உள்ள கேம்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 8) வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த பிரபாகரன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் காற்று வாங்க போவதாக கூறி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்த பிரபாகரன் திடீரென்று கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியிருந்த பிரபாகரனை அருகிலிருந்த நபர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.