தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்னையால் உதவி ஆய்வாளர் கழுத்தறுத்து தற்கொலை..! - chennai

சென்னை:  குடும்ப பிரச்னை காரணமாக உதவி காவல் ஆய்வாளர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

உதவி ஆய்வாளர் தற்கொலை

By

Published : Jul 9, 2019, 10:45 AM IST

சென்னை வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்.ஜே.சேகர்(48). இவர் கே.கே நகர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி உயர்வு கிடைத்தது. அதன்படி உதவி ஆய்வாளருக்கான பயிற்சி பெற்று வந்த அவர், கடந்த நான்கு நாட்களாக பயிற்சிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை குடிபோதையில் இருந்த சேகர், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து தகவலறிந்து வந்த வடபழனி காவல்துறையினர், சேரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details