தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காக்கிக்குள் கலைஞன்' - இளையராஜா பாடலை பாடி அசத்திய காவல் துணை ஆணையர் - சென்னை காவல்துறை செய்திகள்

சென்னையில் பிரபல உணவகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு விருந்தோம்பல் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஆணையர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் வெளியான நின்னை சரணடைந்தேன் பாடலைப் பாடி அசத்தினார்.

சென்னையில் இளையராஜா பாடலை பாடி அசத்திய துணை ஆணையர்
சென்னையில் இளையராஜா பாடலை பாடி அசத்திய துணை ஆணையர்

By

Published : Jan 4, 2023, 10:35 PM IST

'காக்கிக்குள் கலைஞன்' - இளையராஜா பாடலை பாடி அசத்திய காவல் துணை ஆணையர்

சென்னையில்சமீபத்தில் 45 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

குறிப்பாக அதில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை கமிஷ்னராகவும், தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பச்சேரா அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு துணை ஆணையராகவும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தெற்கு இணை ஆணையர் நரேந்திரன் நாயர் நேற்று பணியிட மாறுதலாகி செல்வதால், அண்ணா சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் வழியனுப்பும் நிகழ்ச்சியும், புத்தாண்டின்போது தெற்கு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக காவல் ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்களுக்கு விருந்தளித்து பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது இந்நிகழ்வில் பங்கேற்ற அடையார் துணை ஆணையர் மகேந்திரன், இளையராஜா இசையில் பாரதி படத்தில் வெளியான ’நின்னை சரணடைந்தேன்’ பாடலை பாடி அசத்தினார். இந்த பாடலை பாடியவுடன் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து காவல் அதிகாரிகளும் துணை ஆணையர் மகேந்திரனுக்கு பாராட்டை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நீட் வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு ஏமாற்றுகிறது - ஈபிஎஸ் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details