தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - ரூ. 340 கோடியில் புதிய திட்டங்கள் - சட்டப்பேரவைத் தலைவர்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வேளாண் துறையில் 340 கோடி ரூபாய் செலவில் பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

By

Published : Aug 19, 2021, 6:06 PM IST

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து என்ற பெயரில் பனைமரத்தை காலி செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் அவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட நெல் ஜெயராமன் பெயரில் பாதுகாப்பு இயக்கத்தை முதலமைச்சர் அறிவித்து இருப்பதாக தெரிவித்தார்.

பாரம்பரிய நெல் வகைகள்

இதன் காரணமாக 200 ஏக்கரில் 10,000 விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில் பாரம்பரிய நெல் வகைகளை விளைவித்து அவற்றை பாதுகாப்பதுடன், விவசாயிகளிடமிருந்து மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பனைமரம் பாதுகாப்பு

பனைமர பாதுகாப்பு என்ற பெயரில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு ஒரு லட்சம் பனை விதைகளை சொந்த செலவில் வேளாண் துறைக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை


இதற்கு பதில் அளித்து பேசிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்துறை அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் போது சட்டப்பேரவைத் தலைவர் அமைதியாக இருந்ததாகவும், பனை மரம் குறித்த பேச்சு வந்தபோது ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக வழங்குவோம் என தெரிவித்தது, மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த கூடிய வகையில் வேளாண் துறையில் 340 கோடி ரூபாய் செலவில் அரசு பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார். தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை கேட்பவர்களாக இல்லாமல் வேலை தருபவர்களாக உருவாக்குவோம் எனறும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி - சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details